15
ஏனெனில், அவரே மோசேயிடம், “யார் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேனோ, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்: யார் யாருக்குப் பரிவுகாட்ட விரும்புகிறேனா, அவர்களுக்குப் பரிவுகாட்டுவேன்” என்றார்.
16
ஆகவே, மனிதர் விரும்புவதாலோ உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை: கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகிறது.
17
பார்வோனுக்கு மறைநூல் கூறுவதும் இதுவே: “உன் வழியாய் என் வல்லமையைக் காண்பிக்கவும் என் பெயரை நாடெங்கும் அறிக்கையிடவுமே நான் உன்னை நிலைக்கச் செய்தேன்.”
18
ஆகவே, கடவுள் தாம் விரும்புவது போலச் சிலருக்கு இரக்கம் காட்டுகிறார்: வேறு சிலரைக் கடின உள்ளத்தினர் ஆக்குகிறார்.