14
திருச்சட்டம் ஆவிக்குரியது என்பது நமக்குத் தெரிந்ததே: ஆனால் நான் ஊனியல்பினன்: பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டவன்.
15
ஏனெனில், நான் செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை: எதைச் செய்ய விரும்புகிறேனா அதை நான் செய்வதில்லை: எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன்.
16
நான் விரும்பாததைச் செய்கிறேன் எனில் சட்டம் நல்லது என நான் ஏற்றுக் கொள்ளுகிறேன் என்றாகிறது.
17
ஆனால் அவ்வாறு செய்வது என்னுள் குடிகொண்டிருக்கும் பாவமே: நான் அல்ல.
18
ஏனெனில், என்னுள், அதாவது வலுவற்ற என் ஊனியல்பில், நல்லது எதுவும் குடிகொண்டிருக்கவில்லை என எனக்குத் தெரியும். நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை: அதைச் செய்யத்தான் முடியவில்லை.
19
நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை: விரும்பாத தீமையையே செய்கிறேன்.
20
நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை: என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது.
21
நான் நன்மை செய்ய விரும்பினாலும், என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது. இத்தகையதொரு செயல் முறையை என்னுற் காண்கிறேன்,
22
நான் கடவுளின் சட்டத்தைக்குறித்து உள்@ர மகிழ்ச்சியடைகிறேன்.
23
ஆனால், என் உறுப்புகளில் வேறொரு சட்டத்தைக் காண்கிறேன்: என் மனம் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை அது எதிர்த்துப் போராடுகிறது: என் உறுப்புகளில் இருக்கும் அந்தப் பாவச் சட்டத்திற்கு என்னைக் கட்டுப்படுத்துகிறது.
24
அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்குள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?
25
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்தாம் விடுவிப்பார்: அவருக்கு நன்றி! சுரங்கச் சொல்லின், என் மனத்தால் கடவுளின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருக்கும் நானே என் ஊனியல்பினால் பாவத்தின் சட்டத்திற்கும் கட்டுப்பட்டிருக்கிறேன்.