ரோமர் 3:1-4 - WCV
1
அப்படியானால், மற்றவர்களை விட யூதர்கள் பெற்றுள்ள சிறப்பு என்ன? விருத்தசேதனத்தால் அவர்களுக்குப் பயன் என்ன?
2
எல்லா வகையிலும் அவர்கள் பெரும்பயன் பெற்றுள்ளார்கள். முதலாவது, கடவுளின் வாக்குகள் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.
3
ஆனால், அவர்களுள் சிலர் அவ்வாக்குகளை நம்பவில்லையே! அதனாலென்ன? அவர்கள் நம்பாதலால், கடவுள் நம்பத்தகாதவர் ஆகிவிடுவாரா?
4
ஒருபோதுமில்லை. மனிதர் எல்லாரும் பொய்யர்: கடவுளோ உண்மை உள்ளவர் என்பது தெளிவாகும். ஏனெனில்.”உமது சொற்களில் நீதி வெளிப்படுகிறது: உம் தண்டனைத் தீர்ப்புகளில் வெற்றி விளங்குகிறது” என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!