1
மன வலிமை கொண்டவர்களாகிய நாம் வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்: நமக்கு உகந்ததையே தேடலாகாது.
2
அடுத்தவருடைய நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு அவர்களுக்கு உகந்தவர்களாக வாழுங்கள்.
3
கிறிஸ்துவும் தமக்கு உகந்ததைத் தேடவில்லை. “உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என் மீது விழுந்தன” என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!