17
தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்: எல்லா மனிதரும் நலமெனக் கருதுபவை பற்றியே எண்ணுங்கள்.
18
இயலுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் அமைதியுடன் வாழுங்கள்.
19
அன்பார்ந்தவர்களே! பழிவாங்காதீர்கள்: அதைக் கடவுளின் சினத்திற்கு விட்டுவிடுங்கள். ஏனெனில், மறைநூலில் எழுதியுள்ளவாறு, “பழிவாங்குவதும் கைம்மாறு அளிப்பதும் எனக்கு உரியன” என்கிறார் ஆண்டவர்.
20
நீயோ, “உன் எதிரி பசியாய் இருந்தால், அவனுக்கு உணவு கொடு: அவன் தாகத்தோடு இருந்தால், அவன் குடிக்கக் கொடு. இவ்வாறு செய்வதால், அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்.”
21
தீமை உங்களை வெல்லவிடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள்!