ரோமர் 1:7-15 - WCV
7
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
8
முதற்கண் உங்கள் அனைவருக்காகவும் நான் இயேசு கிறிஸ்து வழியாய் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். ஏனெனில் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை உலக முழுவதிலும் தெரிந்திருக்கிறது.
9
தம் திருமகனைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் பணியின் மூலம் நான் உளமார வழிபட்டுவரும் கடவுள் சாட்சியாய்ச் சொல்கிறேன்: உங்களை நினைவுகூர்ந்து,
10
உங்களுக்காக எப்போதும் இறைவனிடம் வேண்டி வருகிறேன். கடவுளின் திருவுளத்தால் நான் உங்களிடம் வருவதற்கு இப்பொழுதாவது இறுதியாக ஒரு வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென மன்றாடி வருகிறேன்.
11
நான் உங்களைக் காண ஏங்குகிறேன்: அங்கே வந்து உங்களை உறுதிப்படுத்துவதற்காக ஆவிக்குரிய கொடை ஏதேனும் உங்களுக்கு வழங்க வேண்டுமென விழைகிறேன்.
12
நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையால் நானும், நான் கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்களும் ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டப் பெறவேண்டுமென விழைகிறேன்.
13
பிற மக்களிடையே நான் செய்த பணியால் பயன்விளைந்தது. அதுபோல உங்களிடையேயும் சிறிதளவாவது பயன்விளையும் முறையில் பணியாற்ற விரும்பி உங்களிடம் வர பன்முறை திட்டமிட்டேன்: ஆயினும் இன்று வரை தடைகள் வந்து கொண்டே இருக்கின்றன. சகோதர சகோதரிகளே, இதை நீங்கள் அறியவேண்டுமென விரும்புகிறேன்.
14
கிரேக்கருக்கும் கிரேக்கரல்லாதார்க்கும், அறிவாளிகளுக்கும் அறிவிலிகளுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
15
ஆதலால்தான் உரோமையராகிய உங்களுக்கும் நற்செய்தி அறிவிக்கவேண்டுமென நான் ஆர்வம் கொண்டுள்ளேன்.