35
முன்பு, “உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவர் யார்?” என்று கூறி மக்கள் மோசேயை ஏற்க மறுத்தார்கள். ஆனால் அதே மோசேயையே கடவுள் முட்புதரில் தோன்றிய தம் தூதர் வழியாய்த் தலைவராகவும் மீட்பராகவும் அனுப்பினார்.
36
அவர் அவர்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தார்: அங்கும் செங்கடலிலும் நாற்பது ஆண்டுகளாகப் பாலைநிலத்திலும் அருஞ்செயல்களையும் அடையாளச் செயல்களையும் புரிந்தார்.
37
“கடவுள் என்னைப்போன்ற இறைவாக்கினர் ஒருவரைச் சகோதரர்களாகிய உங்கள் நடுவிலிருந்து தோன்றச் செய்வார்” என்று இஸ்ரயேல் மக்களிடம் கூறியதும் இதே மோசேதான்.