32
“உன்னுடைய மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் கடவுள் நானே” என்று ஆண்டவரின் குரல் ஒலித்தது. மோசே நடுநடுங்கி இக்காட்சியைக் கூர்ந்து கவனிக்கத் துணியவில்லை.
33
கடவுள் அவரிடம், “உன் கால்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு. ஏனெனில் நீ நின்றுகொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்.
34
எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன். அவர்களது ஏக்கக் குரலைக் கேட்டேன். அவர்களை விடுவிக்கும்படி இறங்கி வந்துள்ளேன். உன்னை எகிப்துக்கு அனுப்பப்போகிறேன். இப்போதே வா” என்றார்.
35
முன்பு, “உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவர் யார்?” என்று கூறி மக்கள் மோசேயை ஏற்க மறுத்தார்கள். ஆனால் அதே மோசேயையே கடவுள் முட்புதரில் தோன்றிய தம் தூதர் வழியாய்த் தலைவராகவும் மீட்பராகவும் அனுப்பினார்.