அப்போஸ்தலர் 3:2-10 - WCV
2
அப்பொழுது பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் சிலர் சுமந்துக் கொண்டு வந்தனர். கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சைக் கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் “அழகுவாயில்” என்னுமிடத்தில் வைப்பர்.
3
அவர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சைக் கேட்டார்.
4
பேதுருவும் யோவானும் அவரை உற்றுப்பார்த்து, “எங்களைப் பார்” என்று கூறினர்.
5
அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார்.
6
பேதுரு அவரிடம், “வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை: என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று கூறி,
7
அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார்கள். உடனே அவரது காலடிகளும் கணுத்கால்களும் வலுவடைந்தன.
8
அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார்: துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார்.
9
அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்களனைவரும் கண்டனர்.
10
அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகு வாயில் அருகே பிச்சைக்கேட்டுக் கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துக்கொண்டனர்: நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்ம்மறந்து நின்றனர்.