20
கதிரவனோ, விண்மீன்களோ பல நாள்களாய்த் தென்படவில்லை. கடும்பயல் வீசி மழை பெய்து கொண்டிருந்தது. இனி தப்பிப் பிழைப்போம் என்னும் இல்லாமல் போய்விட்டது.
21
பல நாளாகக் கப்பலில் இருந்தோர் எதுவும் நடுவில் எழுந்த நின்று கூறியது: “நண்பர்களே! நீங்கள் நான் சொல்வதைக் கேட்டுக் கிரேத்துத் தீவை விட்டுப் புறப்படாமலிருந்திருக்க வேண்டும். அப்பொது இந்தக் கேடும் இழப்பும் நேர்ந்திருக்காது.
22
இப்போதும் நீங்கள் மனஉறுதியுடன் இருக்குமாறு உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். கப்பலுக்குத்தான் இழப்பு நேரிடுமேயன்றி உங்களுள் எவருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படாது.
23
என்மேல் உரிமையுடையவரும் நான் வழிபடுபவருமான கடவுளின் தூதர் நேற்றிரவு என்னிடம் வந்து,
24
24”பவுலே, அஞ்சாதீர்! நீர் சீசர் முன்பாக விசாரிக்கப்படவேண்டும். உம்மோடுகூடக் கப்பலிலுள்ள அனைவரையும் கடவுள் உம் பொருட்டுக் காபாற்றப் போகிறார்” என்று கூறினார்.
25
ஆகவே நண்பாகளெ! மன உறுதியுடனிடருங்கள். நான் கடவுளிடம் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அவர் என்னிடம் சொன்னவாறே நடக்கும்.