அப்போஸ்தலர் 27:13-15 - WCV
13
தென்றல் காற்று வீசியபோது எங்களது நோக்கம் கைகூடியது என எண்ணி நங்கூரத்தைத் தூக்கிவிட்டு கிரேத்துத் தீவு கரையோரமாகச் சென்றோம்.
14
சிறிது நேரத்தில் “வாடைக் கொண்டல்” என்னும் பேய்க் காற்று வீசத் தொடங்கியது.
15
கப்பல் அதில் அகப்பட்டுக் கொண்டதால் காற்று வீசிய திசைக்கு எதிராக அதைச் செலுத்த முடியவில்லை: எனவே காற்று வீசிய திசையிலேயே கப்பலோடு அடித்துச் செல்லப்பட்டோம்.