12
பொழுது விடிந்ததும் யூதர்கள் ஒன்று கூடி, “நாங்கள் பவுலைக் கொல்லும் வரை உண்ணவோ, குடிக்கவோ மாட்டோம்” எனத் தங்களிடையே சூளுரைத்துக் கொண்டார்கள்.
13
இவ்வாறு, சூழ்ச்சி செய்தவர்கள் எண்ணிக்கை நாற்பதுக்குக் கூடுதல் இருக்கும்.
14
அவாகள் தலைமைக் குருவிடமும் மூப்பரிடமும் சென்று, “நாங்கள் பவுலைக் கொல்லும் வரை எதுவும் உண்ண மாட்டோம் என்று ஆணையிட்டு சூளுரைத்துள்ளோம்.
15
எனவே இப்போது நீங்களும் தலைமைச் சங்கத்தாரும் மிகக் கருத்தாய் விசாரிக்கும் நோக்குடன் அவரை உங்களிடம் கூட்டிக்கொண்டு வருவதாக ஆயிரத்தவர் தலைவரிடம் தெளிவுபடுத்துங்கள். அவர் உங்களிடம் வந்து சேருமுன் அவரைக் கொன்றுவிட நாங்கள் ஆயத்தமாயிருப்போம்” என்றார்கள்.