18
ஆண்டவரை நான் கண்டேன், அவர் என்னிடம், “நீ உடனே எருசலேமை விட்டு விரைவாகப் புறப்படு. ஏனெனில் என்னைப் பற்றி நீ அளிக்கும் சான்றை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என்றார்.
19
அதற்கு நான், “ஆம் ஆண்டவரே, உம்மீது நம்பிக்கை கொண்டோரை நான் சிறையிலடைத்தேன்: தொழுகைக் கூடங்களில் அவர்களை நையப் புடைத்தேன்:
20
உம் சாட்சியாம் ஸ்தேவான் கொலை செய்தோரின் மேலுடைகளைக் காவல் செய்து கொண்டிருந்தேன். இவை அனைத்தும் அங்குள்ளோருக்குத் தெரியும்” என்றேன்.
21
அவர் என்னை நோக்கி, “புறப்படு! தொலையிலுள்ள பிற இனத்தவரிடம் நான், உன்னை அனுப்புகிறேன்” என்றார்.”
22
இதுவரைக்கும் பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள், “இவனை அடியொடு ஒழியுங்கள்: இவன் வாழத் தகுதியற்றவன்” என்று கத்தினார்.