24
ஆனால் கடவுள் அவரை மரணவேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச்செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.
25
தாவீது அவரைக்குறித்துக் கூறியது: 'நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்: அவர் என் வலப்பக்கம் உள்ளார்: எனவே நான் அசைவுறேன்.
26
இதனால் என் இதயம் பேறுவகைகொள்கின்றது: என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும்.
27
ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுக்குழியைக் காணவிடமாட்டீர்.
28
வாழ்வின்வழியை நான் அறியச்செய்வீர்: உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.'