அப்போஸ்தலர் 12:21-23 - WCV
21
குறித்த நாளில் ஏரோது அரச ஆடை அணிந்து மேடையில் அமர்ந்து அவர்களுக்கு உரையாற்றினான்.
22
அப்போது மக்கள், “இது மனிதக் குரல் அல்ல: கடவுளின் குரல்” என்று ஆர்ப்பரித்தனர்.
23
உடனே ஆண்டவரின் தூதர் அவனை அடித்தார். ஏனெனில் அவன் கடவுளைப் பெருமைப்படுத்தவில்லை: அவன் புழுத்துச் செத்தான்.