யோவான் 1:47-49 - WCV
47
நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு,”இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார்.
48
நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார்.
49
நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறை மகன்: நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.