யோவான் 1:40-44 - WCV
40
யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள்”அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.
41
அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, “மெசியாவைக் கண்டோம்” என்றார். “மெசியா” என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள்.
42
பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, “நீ யோவானின் மகன் சீமோன். இனி “கேபா” எனப்படுவாய் என்றார். “கேபா” என்றால் “பாறை” என்பது பொருள்.
43
மறு நாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, “என்னைப் பின்தொடர்ந்து வா” எனக் கூறினார்.
44
பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள்.