லூக்கா 20:16-18 - WCV
16
அவர் வந்து அந்தத் தொழிலாளர்களை ஒழித்து விட்டு, திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் குத்தகைக்கு விடுவார்.” அப்போது அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள், “ஐயோ! அப்படி நடக்கக் கூடாது” என்றார்கள்.
17
ஆனால், இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, 'கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று” என்று மறைநூலில் எழுதியிருப்பதன் பொருள் என்ன?
18
அந்தக் கல்லின் மேல் விழுகிற எவரும் நொறுங்கிப் போவார்: அது யார்மேல் விழுமோ அவரும் நசுங்கிப்போவார்” என்றார்.