லூக்கா 2:26-32 - WCV
26
“ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை” என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.
27
அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.
28
சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,
29
“ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.
30
ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,
31
நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.
32
இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி: இதுவெ உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” என்றார்.