லூக்கா 19:17-26 - WCV
17
அதற்கு அவர் அவரிடம், “நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்” என்றார்.
18
இரண்டாம் பணியாளர் வந்து, “ஐயா உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களை ஈட்டியுள்ளேன்” என்றார்.
19
அவர், “எனவே நீர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்” என்று அவரிடமும் சொன்னார்.
20
வேறொருவர் வந்து, “ஐயா, இதோ உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன்.
21
ஏனெனில் நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர்: நீர் விதைக்காததை அறுக்கிறவர்” என்றார்.
22
அதற்கு அவர் அவரிடம், “பொல்லாத பணியாளே, உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்பானவன்: வைக்காததை எடுக்கிறவன்: விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா?
23
அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே” என்றார்.
24
பின்பு அருகில் நின்றவர்களிடம், “அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்” என்றார்.
25
அதற்கு அவர்கள், “ஐயா, அவரிடம் பத்து மினாக்கள் இருக்கின்றனவே” என்றார்கள்.
26
அவரோ, “உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்” என உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.