28
பேதுரு அவரிடம், “பாரும், எங்கள் உடைமைகளை விட்டுவிட்டு நாங்கள் உம்மைப் பின்பற்றினோமே” என்றார்.
29
அதற்கு அவர் அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இறையாட்சியின் பொருட்டு வீட்டையோ மனைவியையோ சகோதரர் சகோதரிகளையோ பெற்றோரையோ பிள்ளைகளையோ விட்டுவிட்டவர் எவரும்
30
இம்மையில் பன்மடங்கும் மறுமையில் நிலைவாழ்வும் பெறாமல் போகார்” என்றார்.