லூக்கா 15:17-24 - WCV
17
அவர் அறிவு தெளிந்தவராய், “என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே!
18
நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், “அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்:
19
இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்: உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்” என்று சொல்லிக்கொண்டார்.
20
20”உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.
21
மகனோ அவரிடம், “அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்: இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்” என்றார்.
22
தந்தை தம் பணியாளரை நோக்கி, “முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்: இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்:
23
கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்: நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.
24
ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்: மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்: மீண்டும் கிடைத்துள்ளான்” என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.