16
அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்:”செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
17
அவன், “நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!” என்று எண்ணினான்.
18
18”ஒன்று செய்வேன்: என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்: அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்”.
19
பின்பு, “என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன: நீ ஓய்வெடு: உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு” எனச் சொல்வேன்” என்று தனக்குள் கூறிக்கொண்டான்.
20
ஆனால் கடவுள் அவனிடம், “அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?” என்று கேட்டார்.
21
கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.”
22
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது:”ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உயிர்வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர்.
23
உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா?
24
காகங்களைக் கவனியுங்கள்: அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை: அவற்றுக்குச் சேமிப்பறையுமில்லை, களஞ்சியமுமில்லை. கடவுள் அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். நீங்கள் பறவைகளைவிட மேலானவர்கள் அல்லவா?