6
அதற்கு அவர், “வெளிவேடக்காரர்களாகிய உங்களைப்பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். “இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்: இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது.
7
மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்” என்று அவர் எழுதியுள்ளார்.
8
நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.
9
மேலும் அவர், “உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள்.
10
“உன் தந்தையையும் தாயையும் மதித்துநட” என்றும் தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்” என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா!
11
ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, “நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது”கொர்பான்” ஆயிற்று: அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று” என்றால்,
12
அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை.
13
இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.
14
இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, “நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள்.