32
அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், “நன்று போதகரே, “கடவுள் ஒருவரே: அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை” என்று நீர் கூறியது உண்மையே.
33
அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது” என்று கூறினார்.
34
அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.