மத்தேயு 9:36-38 - WCV
36
திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்.
37
அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி: வேலையாள்களோ குறைவு.
38
ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள் “ என்றார்.