3
சோதிக்கிறவன் அவரை அணுகி, “ நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டடையிடும்” “ என்றான்.
4
அவர் மறுமொழியாக, “ மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் “ என மறைநூலில் எழுதியுள்ளதே “ என்றார்.
5
பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி,
6
“நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்: “ கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள் “ என்று மறைநூலில் எழுதியுள்ளது “ என்று அலகை அவரிடம் சொன்னது.
7
இயேசு அதனிடம், “ 'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம் “ எனவும் எழுதியுள்ளதே “ என்று சொன்னார்.
8
மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,
9
அவரிடம், “ நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன் “ என்றது.
10
அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, “அகன்று போ, சாத்தானே, “ உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் “ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது “ என்றார்.
11
பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.