மத்தேயு 3:1-6 - WCV
1
அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலை நிலத்துக்கு வந்து,
2
“ “ மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது “ என்று பறைசாற்றி வந்தார்.
3
இவரைக் குறித்தே, “ பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் “ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார்.
4
இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்: தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்: வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.
5
எருசலேமிலும் யtதேயாமுழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகளனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள்.
6
அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.