மத்தேயு 27:63-66 - WCV
63
அவர்கள், “ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது “மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன் “ என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது.
64
ஆகையால் மூன்று நாள்வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு, “இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் “ என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையைவிடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும் “ என்றனர்.
65
அதற்குப் பிலாத்து அவர்களிடம், “உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள் “ என்றார்.
66
அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.