மத்தேயு 27:20-25 - WCV
20
ஆனால் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் பரபாவை விடுதலை செய்யக் கேட்கவும் இயேசுவைத் தீர்த்துக்கட்டவும் கூட்டத்தினரைத் தூண்டி விட்டார்கள்.
21
ஆளுநன் அவர்களைப் பார்த்து, “இவ்விருவரில் யாரை விடுதலை செய்யவேண்டும்? உங்கள் விருப்பம் என்ன? “ எனக் கேட்டான். அதற்கு அவர்கள் “பரபாவை “ என்றார்கள்.
22
பிலாத்து அவர்களிடம், “அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்? “ என்று கேட்டான். அனைவரும், “சிலுவையில் அறையும் “ என்று பதிலளித்தனர்.
23
அதற்கு அவன், “இவன் செய்த குற்றம் என்ன? “ என்று கேட்டான். அவர்களோ, “சிலுவையில் அறையும் “ என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள்.
24
பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, “இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் “ என்று கூறித் தன் கைகளைக் கழுவினான்.
25
அதற்கு மக்கள் அனைவரும், “இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும் “ என்று பதில் கூறினர்.