47
இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்நது.
48
அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன், “நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு: அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள் : என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.
49
அவன் நேராக இயேசுவிடம் சென்று, “ரபி வாழ்க “ எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.
50
இயேசு அவனிடம், “தோழா, எதற்காக வந்தாய்? “ என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர்.