மத்தேயு 25:1-10 - WCV
1
“அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.
2
அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்: ஐந்து பேர் முன்மதி உடையவர்கள்.
3
அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்: ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.
4
முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.
5
மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.
6
நள்ளிரவில், “இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள் “ என்ற உரத்த குரல் ஒலித்தது.
7
மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.
8
அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, “எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன: உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள் “ என்றார்கள்.
9
முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, “உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது “ என்றார்கள்.
10
அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.