மத்தேயு 22:37-40 - WCV
37
அவர், “உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. “
38
இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.
39
“உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக “ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.
40
திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன “ என்று பதிலளித்தார்.