8
பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர்.
9
அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், “தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா! “ என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.
10
அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைய, “இவர் யார்? “ என்னும் கேள்வி எழுந்தது.
11
அதற்குக் கூட்டத்தினர், “இவர் இறைவாக்கினர் இயேசு: கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர் “ என்று பதிலளித்தனர்.