42
இயேசு அவர்களிடம், “கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழிந்துள்ளது: நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! “ என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா?
43
எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்: அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
44
“இந்தக் கல்லின்மேல் விழுகிறவர் நொறுங்கிப்போவார். இது யார் மேல் விழுமோ அவரும் நசுங்கிப் போவார் “"" என்றார்.
45
தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டபோது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்து கொண்டனர்.