மத்தேயு 16:6-12 - WCV
6
இயேசு அவர்களிடம் “ பரிசேயர், சதுசேயரின் புளிப்பு மாவைக்குறித்துக் கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இருங்கள் “ என்றார்.
7
“ நாம் அப்பங்களை எடுத்து வராததால்தான் அவர் இப்படிச் சொன்னார் “ எனத் தங்களிடையே அவர்கள் பேசிக்கொண்டார்கள்.
8
இதை அறிந்த இயேசு, “ நம்பிக்கை குன்றியவர்களே, அப்பமில்லை என்று உங்களிடையே ஏன் பேசிக் கொள்கிறீர்கள்?
9
உங்களுக்கு இன்னுமா புரியவில்லை? நான் ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளித்த ஐந்து அப்பங்களைப் பற்றி நினைவில்லையா? அப்போது எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தீர்கள்?
10
அல்லது நாலாயிரம் பேருக்கு நான் பகிர்ந்தளித்த ஏழு அப்பங்களைப்பற்றி நினைவில்லையா? அப்போது எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தீர்கள்?
11
நான் உங்களிடம் கூறியது அப்பங்களைப் பற்றியல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ளாதது எப்படி? பரிசேயர், சதுசேயர் ஆகியோரின் புளிப்பு மாவைப்பற்றி எச்சரிக்கையாய் இருங்கள் “ என்றார்.
12
அப்பொழுதுதான் அப்பத்திற்கான புளிப்பு மாவைப் பற்றி அவர் சொல்லவில்லை: மாறாகப் பரிசேயர், சதுசேயர் ஆகியோரின் போதனையைப்பற்றி எச்சரிக்கையாய் இருக்கவே அவர் சொன்னார் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.