15
மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, “ இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் “ என்றனர்.
16
இயேசு அவர்களிடம், “ அவர்கள் செல்ல வேண்டியதில்லை: நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் “ என்றார்.
17
ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, “ எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை “ என்றார்கள்.
18
அவர், “ அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள் “ என்றார்.
19
மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.
20
அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
21
பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலான உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.