3
யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்: பெரேட்சின் மகன் எட்சரோன்: எட்சரோனின் மகன் இராம்.
4
இராமின் மகன் அம்மினதாபு: அம்மினதாபின் மகன் நகசோன்: நகசோனின் மகன் சல்மோன்.
5
சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு: போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது: ஓபெதின் மகன் ஈசாய்.
6
ஈசாயின் மகன் தாவீது அரசர்: தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.