3
நீ அவர்களிடம் சொல்: நெருப்புப் பலியாக நீங்கள் ஆண்டவருக்குப் படைக்க வேண்டியது: அன்றாட எரிபலியாக எந்நாளும் செலுத்த ஒரு வயதுடைய பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகள்.
4
இவற்றுள் ஒன்றைக் காலையிலும், மற்றதை மாலையிலும் பலியிட வேண்டும்.
5
அத்துடன், உணவுப் படையலாக இருபதுபடி மரக்காலில் பத்தில் ஒரு அளவு மிருதுவான மாவை அடித்துப் பிழியப்பட்ட கால் கலயம் எண்ணெயுடன் பிசைய வேண்டும்.
6
இது எந்நாளும் செலுத்தும் எரிபலி: இது ஆண்டவருக்குரிய நெருப்புப் பலியாகவும் உகந்த நறுமணமாகவும் சீனாய் மலையில் ஏற்படுத்தப்பட்டது.
7
அத்துடன் ஒவ்வோர் ஆட்டுக்குட்டிக்கும் கால் கலயம் வீதம் நீர்மப் படையல் நீங்கள் செலுத்த வேண்டும்: ஆண்டவருக்கு நீர்மப் படையலாகத் திருஉறைவிடத்தில் மதுபானத்தை ஊற்ற வேண்டும்.
8
மற்ற ஆட்டுக் குட்டியை நீங்கள் மாலையில் பலியிட வேண்டும்.காலையிலுள்ள உணவுப் படையல் போன்றும், அதன் நீர்மப்படையல் போன்றும் அதை நெருப்புப் பலியாகவும் ஆண்டவருக்கு உகந்த நறுமணமாகவும் நீங்கள் படைக்க வேண்டும்.
9
ஓய்வு நாளில், ஒரு வயதுடைய இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த இருபதுபடி மரக்காலில் பத்தில் இரண்டு அளவு மிருதுவான மாவையும், அத்துடன்நீர்மப் படையலையும் செலுத்த வேண்டும்.
10
எந்நாளும் செலுத்தும் எரிபலியும் நீர்மப் படையலும் நீங்கலாக இது ஒவ்வோர் ஓய்வு நாளிலும் செலுத்தப்பட வேண்டிய எரிபலி ஆகும்.