எண்ணாகமம் 26:55-65 - WCV
55
ஆயினும், திருவுளச் சீட்டு முறையிலேயே நாடு பங்கிடப்படும்.அவர்கள் தங்கள் மூதாதையர் குலப்பெயர்கள் வாரியாக உரிமைச் சொத்தைப் பெறுவர்.
56
பெரியவற்றுக்கும், சிறியவற்றுக்குமிடையே திருவுளச் சீட்டு முறைப்படி அதனதன் உரிமைச் சொத்து பங்கிடப்படும்.
57
தங்கள் குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்ட லேவியர் இவர்களே: கேர்சோன், கேர்சோன் வீட்டார்: கெகாது, கெகாது வீட்டார்: மெராரி, மெராரி வீட்டார்.
58
லேவி குடம்பங்களாவன: லிப்னி குடும்பம், எபிரோன் குடும்பம், மக்லி குடும்பம், மூசி குடும்பம், கோராகு குடும்பம்.கெகாது அம்ராமின் தந்தை.
59
அம்ராம் மனைவி பெயர் யோக்கபெத்து.இவள் லேவி மகள்: லேவிக்கு எகிப்தில் பிறந்தவள்.அம்ராமுக்கு இவள் ஆரோன், மோசே, அவர்களின் சகோதரி மிரியாம் ஆகியோரைப் பெற்றெடுத்தாள்.
60
ஆரோனுக்குப் பிறந்தவர்கள் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் ஆகியோர்.
61
ஆனால் நாதாபும், அபிகூவும் ஆண்டவர் முன் வேற்று நெருப்பைக் கொண்டு வந்தபோது கொல்லப்பட்டனர்.
62
லேவியருள் ஒரு மாதமும் அதற்கு மேலும் வயதுடைய ஆண்களில் எண்ணப்பட்டோர் இருபத்து மூவாயிரத்து பேர்.இஸ்ரயேல் மக்களிடையே அவர்கள் பதிவு செய்யப்படவில்லை.ஏனெனில் இஸ்ரயேல் மக்களிடையே அவர்களுக்கு எந்த உரிமைச் சொத்தும் தரப்படவில்லை.
63
மோசேயாலும் குரு எலயாரசராலும் எண்ணப்பட்டோர் இவர்களே.அவர்கள் இஸ்ரயேல் மக்களை எரிகோவுக்கு எதிரே யோர்தானை அடுத்த மோவாபியச் சமவெளியில் எண்ணினார்கள்.
64
ஆனால், சீனாயப் பாலை நிலத்தில் எண்ணப்பட்டிருந்த இஸ்ரயேல் மக்களில், அதாவது மோசேயாலும் குரு ஆரோனாலும் எண்ணப்பட்டோருள் எவரும் இவர்களிடையே இல்லை.
65
ஏனெனில், “அவர்கள் பாலைநிலத்தில் மடிந்து விடுவர்” என்று ஆண்டவர் சொல்லியிருந்தார்.எப்புன்னே புதல்வன் காலேபையும் நூன் புதல்வன் யோசுவாவையும் தவிர அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை.