8
கடவுள் அவனை எகிப்திலிருந்து கொண்டு வருகிறார்: காண்டா மிருகத்தின் கொம்புகள் அவனுக்குண்டு: அவன் தன் எதிரிகளாகிய வேற்று இனத்தவரை விழுங்கிவிடுவான்: அவர்கள் எலும்புகளைத் தூள் தூள்களாக நொறுக்குவான்: அவர்களைத் தன் அம்புகளால் ஊடுருவக் குத்துவான்:
9
அவன் துயில் கொண்டான்: சிங்கம் போன்றும் பெண் சிங்கம் போன்றும் படுத்துக்கொண்டான்: அவனை எழுப்பி விடுவோன் யார்? உனக்கு ஆசி கூறுவோன் ஆசி பெறுவான்: எனவே உன்னைச் சபிப்போன் சாபமடைவான்!”
10
எனவே பிலயாம் மீது பாலாக்கு கடும் சினம் கொண்டு தன் கைகளைத் தட்டி பிலயாமிடம், “என் எதிரிகளைச் சபிக்கவே நான் உம்மை அழைத்தேன்: ஆனால் நீர் இம்மூன்று முறையும் அவர்களுக்கு ஆசி கூறியுள்ளீர்: