6
ஆனால் இப்பொழுதோ நம்வலிமை குன்றிப் போயிற்று: மன்னாவைத் தவிர வேறெதுவும் நம் கண்களில் படுவதில்லையே!”
7
மன்னா கொத்துமலிலி விதைபோன்றும் அதன் தோற்றம் முத்துப்போன்றும் இருந்தது.
8
மக்கள் வெளியில் சென்று அதைச் சேகரித்தனர்: அரவைக் கல்லில் அரைத்தனர் அல்லது உரலில் போட்டு இடித்தனர்: பானைகளில் அதை வேக வைத்து அதில் அப்பங்கள் செய்தனர்: அதன் சுவை எண்ணெயில் செய்த அப்பங்களின் சுவையை ஒத்திருந்தது.
9
இரவில், பாளையத்தின்மேல் பனி விழும்போது மன்னாவும் அதனுடன் விழுந்தது.