13
“எனக்கு எதிராக நீங்கள் கடுஞ்சொற்களை உதிர்த்து வந்தீர்கள்,” என்கிறார் ஆண்டவர். ஆயினும், “உமக்கு எதிராக என்ன பேசினோம்? என்று கேட்கிறீர்கள்.
14
கடவுளுக்கு ஊழியம் செய்வது வீண்: அவரது திருமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதாலும் படைகளின் ஆண்டவர் திருமுன் மனம் வருந்தி நடந்துகொள்வதாலும் நமக்கு என்ன பயன்?
15
இனிமேல் நாங்கள் 'ஆணவக்காரரே பேறுபெற்றோர்' என்போம். கொடியோர் தழைத்தோங்குவது மட்டுமல்ல, கடவுளை அவர்கள் சோதித்துப் பார்த்தாலும், தப்பித்துக் கொள்ளுகிறார்கள் என்றெல்லாம் நீங்கள் கூறவில்லையா?”