சகரியா 14:2-4 - WCV
2
எருசலேமுக்கு எதிராகப் போர்தொடுக்கும்படி நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்று கூட்டப்போகிறேன்: நகர் பிடிபடும்: வீடுகள் கொள்ளையிடப்படும்: பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவார்கள்: நகர் மக்களுள் பாதிப்பேர் அடிமைகளாய் நாடு கடத்தப்படுவார்கள்: ஆனால், எஞ்சியுள்ள மக்களோ, நகரிலிருந்து துரத்தப்படமாட்டார்கள்.
3
பின்பு, ஆண்டவர் கிளம்பிச்சென்று, முன்னாளில் செய்ததுபோல் அந்த வேற்றினத்தாருக்கு எதிராகப் போர்புரிவார்.
4
அந்நாளில் அவருடைய காலடிகள் எருசலேமுக்குக் கிழக்கே உள்ள ஒலிவமலையின் மேல் நிற்கும்: அப்போது ஒலிவமலை கிழக்குமேற்காய்ச் செல்லும் மிகப்பெரும் பள்ளத்தாக்கு ஒன்றில் இரண்டாகப் பிரிக்கப்படும். ஆகவே, அம்மலையின் ஒரு பகுதி வடக்கு நோக்கியும் மற்றொரு பகுதி தெற்கு நோக்கியும் விலகிநிற்கும்.