7
“வாளே எழுந்திடு, என் ஆயனுக்கும் நெருங்கிய நண்பனுக்கும் எதிராகக்கிளர்ந்தெழு என்கிறார் படைகளின் ஆண்டவர். 'ஆயனை வெட்டு: அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்: சிறியோர்க்கு எதிராக என் கையை ஓங்குவேன்.
8
நாட்டு மக்களுள் மூன்றில் இரு பங்கினர் வெட்டுண்டு மாள்வர்: மூன்றில் ஒரு பங்கினரே எஞ்சியிருப்பர்', என்கிறார் ஆண்டவர்.
9
இந்த மூன்றில் ஒரு பங்கினரையும் வெள்ளியை நெருப்பில் இட்டுத் தூய்மைப்படுத்துவது போல் தூய்மைப்படுத்துவேன்: பொன்னைப் புடமிடுவதுபோல் புடமிடுவேன்: அவர்கள் என் பெயரை நினைத்து மன்றாடுவார்கள்: நானும் அவர்கள் மன்றாட்டிற்குச் செவி கொடுப்பேன்: 'இவர்கள் என் மக்கள்' என்பேன் நான், 'ஆண்டவர் எங்கள் கடவுள்' என்பார்கள் அவர்கள்.”