உங்கள் மூதாதையரைப்போல் இருக்கவேண்டாம்: முந்தைய இறைவாக்கினர் அவர்களை நோக்கி, படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: 'உங்களுடைய தீய நெறிகளையும் தீச்செயல்களையும்விட்டுத் திரும்புங்கள்' என்று முழக்கமிட்டனர். ஆனால் 'அவர்கள் எனக்குச் செவி சாய்க்க வில்லை: என் சொல்லைப் பொருள்படுத்தவுமில்லை” என்கிறார் ஆண்டவர்.