9
ஆனால் கிடைத்தது சிறிதளவே. நீங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்தபோது அதையும் நான் ஊதித் தள்ளிவிட்டேன். ஏன்? ஏனெனில், எனது இல்லம் பாழடைந்து கிடக்கும் போது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டைக் கட்டுவதிலேயே கருத்தாய் இருக்கிறீர்கள்.
10
எனவே, வானம் உங்களுக்குப் பனி பெய்வதை நிறுத்தி விட்டது: நிலமும் விளைச்சல் தர மறுத்துவிட்டது.
11
மேலும் நாடும் மலையும், கோதுமையும் திராட்சை இரசமும், எண்ணெயும் நிலத்தின் விளைச்சலும், மனிதரும் கால்நடைகளும், உங்கள் உழைப்பின் பயன் அனைத்துமே வறட்சியால் வாடுமாறு நான் செய்திருக்கிறேன்.”