6
வேற்றினத்தாரை நான் வெட்டி வீழ்த்தினேன்: அவர்களுடைய கோட்டைகளைத் தகர்த்தெறிந்தேன்: அவர்களுடைய தெருக்களை வெறுமையாக்கினேன்: அவற்றில் நடந்துசெல்பவர் எவருமில்லை: யாரும் இராதபடி, எவரும் குடியிராதபடி அவர்களுடைய நகர்கள் பாழடைந்து போயின.
7
“உறுதியாக எனக்கு நீ அஞ்சி நடப்பாய்: எனது கண்டிப்புரையை ஏற்றுக் கொள்வாய்: நான் வழங்கிய தண்டனைத் தீர்ப்புகளை எல்லாம் நீ மறக்கமாட்டாய்” என்று நான் எண்ணினேன்: அவர்களோ தங்கள் செயல்களைச் சீர்கேடாக்க இன்னும் மிகுதியாய் ஆவல் கொண்டனர்.
8
ஆதலால் ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: “நான் குற்றம் சாட்டுவதற்கு எழுந்திடும் அந்த நாளுக்காகக் காத்திரு: வேற்றினத்தாரை ஒன்று சேர்த்து, அரசுகளையும் ஒன்று திரட்டி, என் கடும்சினத்தையும் கோபத்தீயின் கொடுமை முழுவதையும், அவர்கள் மேல் கொட்டிவிடத் திட்டமிட்டுள்ளேன்: ஏனெனில், என் வெஞ்சினத்தீக்கு உலகெல்லாம் இரையாகும்.