செப்பனியா 3:14-16 - WCV
14
மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி: இஸ்ரயேலே! ஆரவாரம் செய்: மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி.
15
ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்: உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்: இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்: நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.
16
அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: “சீயோனே, அஞ்சவேண்டாம்: உன் கைகள் சோர்வடைய வேண்டாம்.