ஆபகூக் 2:9-12 - WCV
9
தீமையின் பளுவிலிருந்து தப்ப, தான் வாழுமிடத்தை மிக உயரத்தில் அமைக்க, தன் குடும்பத்திற்காக நேர்மையற்ற வழியில் பொருள் சேர்க்கிறவனுக்கு ஐயோ”கேடு!
10
உன் திட்டங்களால் உன் குடும்பத்திற்கு மானக்கேட்டை நீ வருவித்தாய்: மக்களினங்கள் பலவற்றை அழித்தமையால், உன் அழிவை நீயே தேடிக்கொண்டாய்.
11
சுவரிலிருக்கும் கற்களும் உனக்கு எதிராகக் கூக்குரலிடும்: கட்டடத்தின் உத்திரம் அதை எதிரொலிக்கும்
12
இரத்தப்பழியால் நகரைக் கட்டி எழுப்பி, அநீதியால் பட்டணத்தை நிலை நாட்டுகிறவனுக்கு ஐயோ கேடு!